ஞாயிறு, 1 நவம்பர், 2020

தினமும் ஒரு செவ்வாழை உண்பதால்...

https://palamunai-lk.blogspot.com/

செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளன. பீட்டா கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும். மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது உடலுக்குள் செல்லும்போது வைட்டமின் ‘ஏ’வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.

வியாழன், 11 ஜூன், 2020

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளின் பட்டியல்:
ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

மழை காலத்தில் வழக்கமான டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதோடு காய்ச்சல், மார்பு சளி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும். இஞ்சியை சமையலிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் பூண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தம், தமனிகளின் செயல்பாடுகளை சீராக பராமரிக்கும் தன்மையும் பூண்டுவுக்கு உண்டு.

ஞாயிறு, 31 மே, 2020

ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் உணவுகள்!

ரத்த ஓட்டம்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சுமந்துசென்று அவற்றை உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து உடலைக் காக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்டிருக்கிறது. உறுப்புகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி, உடல் சுழற்சி எனும்
அடிப்படையான விஷயத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும் முக்கியமான 15 உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.