இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட கனியாகும். இக்கனியில்
புரதம், தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்துகள் அதிகம் நிறைந்து
காணப்படுகின்றது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இலைகளை அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.
இலந்தை மரவேரை அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.
வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி.லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.
தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.
இலந்தைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.