செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

உடல் ஆரோக்கியத்திற்கு

இன்றைய நவீன உலகில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்: அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், வாரவிடுமுறை நாட்களில் மட்டு காரசாரமான உணவுகளை அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம்.
பழங்கள் நிறைய சாப்பிடுவது மலசிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம், சக்தி சேருதல் போன்ற நல்ல பலன்களை அளிக்கிறது.
உணவில் பூண்டு, வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்: பூண்டை தினமும் சமையலில் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் ஒரு வகையை சமையலில் செய்யலாம்.
தினமும் பூண்டு சேர்த்துக் கொள்ளுவதால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் உங்களை எட்டி பார்க்காது.
எட்டு மணி நேர தூக்கம்: பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்னைதான் வரும்.
வருடாந்திர உடல் பரிசோதனை: ஆண்டுதோறும் ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.