ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதில் மாரிஸ் பைப்பர் மற்றும் கிங் எட்வர்ட் வகை கிழங்குகள் எதிர்பார்த்த வெற்றியை அளித்துள்ளது. இந்த வகை கிழங்கில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் உள்ள ஒரு வகை பிரத்யேக மூலக்கூறுக்கு உரிமம்(பேடன்ட்) பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள ப்ரோபயாடிக் யோகர்ட் உள்ளிட்ட இணை உணவுகளை போன்று இந்த சாற்றில் இருந்தும் இணை உணவு தயாரிக்கும் எண்ணம் உள்ளது.
இதுகுறித்து நடைபெறும் தொடர் ஆய்வில் மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்