இந்த ஆய்வில், மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடினமான வெப்பத்தை தரக்கூடியது என்பதால், கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.
இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல், அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும், மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.