உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் நல்லது. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
வாரத்திற்கு 150 நிமிடங்களாவது, அதாவது வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சியை செய்வது அவசியம். இதனால் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை நன்கு குறைவதுடன், உடலுக்கும், இதயத்திற்கும் பல வழிகளிலும் பயனளிக்கிறது.
எனவே உங்கள் உடல் நலத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த முதலீடு உடற்பயிற்சியே.