செவ்வாய், 1 மே, 2012

முகம் பொலிவு பெற உதவும் நத்தை மசாஜ்

முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள நம்மில் அனேகர் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. குறிப்பாக அதிக பணம் செலவழிக்கக் கூட தயங்குவதில்லை.
இப்போது இதற்கான புதிய முறையாக சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளில் நத்தை மசாஜ் மிகவும் பிரபலமாகி வருகின்றது.
ரஷ்யாவில் கிராசனோயஷா நகரில் இதற்கென்ற பிரத்யோகமான நத்தை மசாஜ் கிளப் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை படுக்க வைத்து அவர்களின் முகங்களில் சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால் முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து முகம் புதுப் பொலிவு பெறும் என்கின்றனர்.