வெள்ளி, 16 மார்ச், 2012

பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

ஒவ்வொரு மனிதனும் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவர். அதற்கு பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தெரிவு செய்வதும் அவசியம்.
பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும்.
பாலக்கீரை சூப், வெண்டை பிரை, காலிபிளவர் கட்லட் போன்ற கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலிமையை பாதுகாக்க முடியும்.