தேநீரானது தீங்கு விளைவிக்கும் கொலஸ்திரோலின் அளவையும், குருதியிலுள்ள சீனியின் அளவையும் குறைப்பதனால் மேற்குறித்த பிரச்சினைகள் பற்றி அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் தேநீரில் காணப்படும் பிறிதொரு உள்ளடக்கமாக காணப்படும் பிளேவனொயிட்(flavonoid) எனும் பதார்த்தம் இதய நாளங்களில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் தேநீரின் மூலம் உடலுக்கு 150-200mg வரையான பிளேவனொயிட் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.